மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. வெளியான தகவல்.!
நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.