மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபலத்தின் மகளுக்கு திருமணம்! வித்தியாசமான கெட்டப்பில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா! எப்படியுள்ளார் பார்த்தீர்களா!
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான துரோகி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அதனைத் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விருதுகளையும் குவித்தது.
இந்தநிலையில் சுதா கொங்கரா தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கொரோனோ ஊரடங்கால் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட முடியாத நிலையில், வருகிற நவம்பர் 12-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சுதா கொங்கராவின் மகள் உத்தராவின் திருமணம் சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்தத் திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்பொழுது அவர் நீண்ட தலைமுடியுடன், வித்தியாசமான கெட்டப்பில் இருந்துள்ளார். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.