மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டும் 30 பேர் தான் ஆடியன்ஸாம்... எதற்கும் துணிந்தவன் பரிதாபங்கள்.!
சூர்யா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் என்ற ET. இந்த படம் மார்ச் 10 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ள நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில், குறிப்பிட்ட சமூகத்தினரை சாதிவெறி கொலையாளிகளாக சித்தரித்ததாக கூறப்படுகிறது.
இந்த விசயத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரும் இழப்பை சந்திக்கும் என்று குரல்களை உயர்த்தி, எச்சரிக்கை விடுத்தனர். இதனால் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகரில் உள்ள பி.வி.ஜி மற்றும் ஜெய்சாய் கிருஷ்ணா ஆகிய 2 திரையரங்கில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பாமகவினர் எதிர்ப்பு காரணமாக காவல் துறையினர் பாதுகாப்பும் திரையரங்கின் முன்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள்.
இந்த 2 திரையரங்கில் தலா 500 பேர் என மொத்தமாக 1000 பேர் ஒரு காட்சி பார்க்கலாம் என்ற நிலையில், பி.வி.ஜி திரையரங்கில் முதல் காட்சிக்கு 30 பேர் மட்டும் வந்துள்ளார்கள். ஜெய்சாய் கிருஷ்ணா திரையரங்கில் 100 பேர் மட்டும் படம் முதல்நாள் முதல் கட்சி பார்க்க வந்துள்ளார்கள் என்றும் நேரடி களத்தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது காட்சி, வார இறுதி விடுமுறை நாட்களில் படத்திற்கு பலரும் வந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.