தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஒருவேளை சாப்பாடின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்காக நடிகர் சூர்யா கொடுத்த உதவித்தொகை! எவ்வளவு தெரியுமா?
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தினக்கூலி வாங்கி வரும் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவரான ஆர்.கே.செல்வமணி நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில், ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்துபவர்கள். இந்நிலையில் இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் எனக்கு போன் செய்து, சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் சாவதைவிட, நான் கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை என வேதனையுடன் கூறினார்.
நமது சம்மேளனத்தில் ஒரு வேலை சாப்பாட்டிற்காக கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ முடியும். ஒரு மூட்டை அரிசி 1250 ரூபாய் எனக் கணக்கு வைத்தால் மொத்தமாக 2 கோடி ரூபாய் ஆகிறது. எனவே கருணை உள்ளம் படைத்தவர்கள் தயவுசெய்து உங்களோடு பணிபுரிந்து, வாழ்ந்து வருகிற குடும்பங்களுக்கு உதவுங்கள்.நிதி உதவி அளிப்பீர் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் முதல் ஆளாக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் தொகையை தொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து பல பிரபலங்கள் உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.