மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெற்றிவேலா..! அறுபடை வீட்டை பெருமைப்படுத்திய பாடகர் கிரிஷ்! பாடல் ஆல்பத்தை வெளியிட்டார் நடிகர் சூர்யா!
சமீபத்தில் தமிழ் கடவுளான முருகனையும், கந்தசஷ்டி கவசத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக பேசி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டிருந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அதற்கு தமிழர்களும், தமிழ் மற்றும் இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் கந்த சஷ்டி கவசத்தின் அர்த்தத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகரும், பின்னணி பாடகருமான கிரிஷ், வெற்றிவேலா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். மேலும் அதில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர் சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை புகழ்ந்து பாடியுள்ளார்.
Here’s #Vetrivela a devotional album of my good friend, actor, singer, music composer @krishoffl on @SonyMusicSouthhttps://t.co/oDXk2BIaHc
— Suriya Sivakumar (@Suriya_offl) September 22, 2020
Congratulations!@kavingarmadhan @thisispriyamali@sirajkhan_skp @barani_offl @balaji_indian#வெற்றிவேலா pic.twitter.com/1U80dM4oqN
இந்த பாடல் ஆல்பத்தை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனது அருமை நண்பர் கிரிஷ் உருவாக்கியுள்ள வெற்றிவேலா ஆல்பத்தை சோனி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதனைக் கேட்டு மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.