மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விஜய் செய்ததை இப்ப சொன்னால் நல்லா இருக்காது" நடிகர் சூர்யாவின் பரபரப்பான பேச்சு.!?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் தமிழில் 90களில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
இது போன்ற நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் தற்போது சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 'கங்குவா' திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் சில கிராபிக்ஸ் பணிகள் படத்தில் செய்ய வேண்டியிருப்பதால் ஆகஸ்ட் மாதம் படம் கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக வருகிறது.
இதனை அடுத்து சூர்யா, விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "விஜயும் நானும் காலேஜ் மெட்ஸ் தான். விஜயை ஒரு கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள். காலேஜ் படிக்கும்போது நாங்கள் அதிகமாக சேட்டைகள் செய்வோம். அதையெல்லாம் இப்போ சொன்னா நல்லா இருக்காது". என்று விஜயை பற்றி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.