தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஓவர் கிளாமர்; படுக்கையறை காட்சிகளில் நடித்தது இதனால்தான்.! தமன்னா விளக்கம்.!!கடுப்பான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பலமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் வெப்சீரிசிலும் நடிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
தமன்னா ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அந்த தொடர் அண்மையில் அமேசான் ப்ரைமில் வெளியானது. ஜீ கர்தா தொடரில் நடிகை தமன்னா ஓவர் கவர்ச்சியாகவும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன தமன்னா இதெல்லாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இதுகுறித்து தமன்னா கூறுகையில், வெப் தொடரில் லாவண்யா மற்றும் ரிஷப் கதாபாத்திரத்தின் பயணத்தை விவரிக்க அந்த காட்சிகள் மிகவும் முக்கியமாக இருந்தது. ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த காட்சிகல் வைக்கப்பட வில்லை.
ரிலேஷன்ஷிப் டிராமாவில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் முக்கியமானவை மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அப்படித்தான் இருக்கும். அவ்வாறு நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சுஹைல் என்னை சவுகரியமாக உணரச் செய்தார். எங்கள் கதாபாத்திரங்களின் உறவு குறித்து நானும், சுஹைலும் நன்கு புரிந்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.