பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மறைந்த நடிகர் ரகுவரன் இறப்பின் காரணத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கும் சினிமா பிரபலம்.. அதிர்ச்சியில் திரைதுறையினர்.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் ரகுவரன். இவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பிற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
ரகுவரன் கதாநாயகனாக நடித்த மைக்கேல் ராஜ் மற்றும் கைநாட்டு திரைப்படத்தில் முதலில் ரஜினி தான் நடிக்க இருந்தாராம். ஆனால் ரகுவரன் இப்படத்தில் நடித்து நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடி செம ஹிட்டானது.
அந்த அளவிற்கு இவரது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது திரைத்துறையில் இருப்பவர்களையும் ஈர்த்துள்ளார். மேலும் ரஜினிக்கு பிடித்தமான வில்லனாக ரகுவரன் தான் என்று திரைதுறையில் பேசி வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் பிரபல சர்ச்சையான பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், இவனின் இறப்பை குறித்து பேசியிருக்கிறார். அதாவது ரகுவரனால் குடிக்காமல் இருக்கவே முடியாது. படப்பிடிப்பிற்கு கூட குடித்துக் கொண்டே தான் வருவாராம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால்தான் இறந்துவிட்டார் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.