மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
1000 கோடி வசூல் சாதனை படைக்க போகும் தமிழ் படம் இதுவா.?! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தற்போது பாலிவுட்டில் வெளியாகிய ஷாருக்கானின் பதான் திரைப்படம் ஆயிரம் கோடிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இனி வர இருக்கின்ற எந்த திரைப்படங்கள் இந்த சாதனையை முறியடிக்கும் என பார்க்கலாம்.
இந்த வருடத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகி வரும் படம் ஜெயிலர். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயமாக ஆயிரம் கோடி வசூலை உலக அளவில் குவிக்கும் என பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்தத் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 27 வருடங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை சங்கர் தற்போது இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை எதிர் நோக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் சூர்யா 10 வேடங்களில் நடிக்கும் வரலாற்று திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி படமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணையும் லியோ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படமும் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை ஏற்றி சாதனை புரியும் என எதிர்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.