மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரு படத்திற்கு முத்த காட்சி மிகவும் அவசியம்" பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு..
நடிகராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உள்ளவர் நானி. 2008ஆம் ஆண்டு "அஷ்டசம்மா" என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தற்போது மிருணாள் தாகூர், ஸ்ருதி ஹாசன், பேபி கியாரா ஆகியோருடன் நானி நடித்துள்ள "ஹாய் நன்னா" திரைப்படம் டிசம்பர் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த நானி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறினார், "அப்பா-மகள் பாசம் மற்றும் மென்மையான காதலை அடிபடையாகக் தான் "ஹாய் நன்னா" திரைப்படம். இதில் கதை சொல்லப்பட்டுள்ள விதம் புதியது. தியேட்டர் அனுபவத்திற்காகத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் நிறைய முத்தக்காட்சிகள் உள்ளன. அன்பை வெளிப்படுத்தும் முத்தத்தை விட சிறந்த வழி என்ன இருக்கிறது? இப்போதெல்லாம் பெற்றோர்களே குழந்தைகள் முன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்." என்று நானி கூறியுள்ளார்.