மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீ-மேக்காகும் நடிகர் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படம்! ஹீரோ யார் தெரியுமா??
தமிழ் சினிமாவில் தனது தீராத உழைப்பால், கடின முயற்சியால் போராடி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தடம். இதில் அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதில் தன்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் நாயகியாக நடித்திருந்தனர். தடம் படத்தை மகிழ் திருமேனி எழுதி இயக்கியுள்ளார். மேலும் அருண் ராஜா இசையமைக்க, இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் போதினேனியை வைத்து தெலுங்கில் ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தடம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் வர்தன் கேட்கர் இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ளதாம்.