இப்படி வேணாமே! வலிமை பட தீம் மியூசிக்! இசையமைப்பாளர் யுவனுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ்!



Thala ajith advice to yuvan shankar raja

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், உருவாகிவரும் தல அஜித்தின் 60-வது திரைப்படம் வலிமை.  இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Yuvanஇந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது அவர், நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசையமைத்தபோது, தல அஜித் எனக்கு போன் செய்து, இதுவரை நீங்க பில்லா, பில்லா-2 மங்காத்தா போன்ற படங்களுக்கு கித்தார் வைத்து சூப்பரான தீம் மியூசிக் பண்ணிவிட்டீர்கள். எனவே வலிமை படத்தில் கித்தார் இல்லாமல் தீம் மியூசிக் அமைக்க முயற்சி செய்யுங்கள் எனக் கூறினார். அதனை சவாலாக எண்ணி வலிமை படத்திற்காக கித்தார் இல்லாமலேயே தீம் மியூசிக் தயார் செய்து விட்டேன் என யுவன்  கூறியுள்ளார்.