திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என்ன அஜித் சார்... மைக்கேல் ஜாக்சன் கூடெல்லாம் ஃபிரண்ஷிப்பா".? வைரல் புகைப்படம்.!
பாப் இசை மற்றும் நடன உலகின் முடி சூடா மன்னனாக விளங்கியவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவைச் சார்ந்த இவர் பாப் இசை உலகின் அரசன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். உலகெங்கிலும் திரைக்கவிஞர்கள் முதல் ரசிகர்கள் வரை இவருக்கென சாதாரண மக்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருந்தனர். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் இசை உலகின் முடி சூடா மன்னனாக விளங்கியவர்.
இவரது மூன் வாக் நடனம் இன்றுவரை புகழ்பெற்ற நடன அசைவாக இருந்து வருகிறது. இவரது இசையில் உருவான டேஞ்சரஸ் திரில்லர் மற்றும் இன்வின்சிபில் போன்ற இசையால் உலகப் புகழ்பெற்றவை ஆகும். இத்தகைய புகழ்களைக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் 2009 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இவரது காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இவருடன் புகைப்படம் எடுப்பதற்கும் இவரை சந்திப்பதையும் கனவாக கொண்டிருந்தனர். மிகப்பெரிய திரை பிரபலங்களுக்கும் இவரை சந்திப்பது ஒரு கனவாக இருந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் தல அஜித் குமாருக்கும் மைக்கேல் ஜாக்சன் ஹீரோவாக இருந்திருக்கிறார்.
தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி மைக்கேல் ஜாக்சன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் ஒரு காட்சியின் போது மைக்கேல் ஜாக்சனின் முன் வாக் ஸ்டெப் போடுவார் தல அஜித். இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வெளியான பிறகு அஜித்தின் அந்த நடனத்திற்கு இதுதான் காரணமா என ரசிகர்கள் அந்த போட்டோவை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.