அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சினிமா நடிப்பிலிருந்து ஓய்வுபெற போகிறாரா தல அஜித்?.. வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது அஜித் தனது படத்தை முடித்துவிட்டு 18 மாதங்கள் சினிமாவிற்கு ஓய்வு தர உள்ளதாக செய்தி பரவியுள்ளது.
மேலும் கோலிவுட் வட்டாரங்களும் அஜித் அப்படி மொத்தமாக பிரேக் எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தல அஜித் சினிமாவிலிருந்து ஒய்வு பெறுவது உறுதியாகும்.