மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சைக்கோ கணவரால் வைக்கம் விஜயலட்சுமிக்கு நடந்த சோகம்... விவாகரத்துக்கான காரணத்தை பகிர்ந்த விஜயலட்சுமி..!
வைக்கம் விஜயலட்சுமி தனது குயில் போன்ற இனிமையான குரலால் பாடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். வைக்கம் விஜயலட்சுமி கேரளாவை சேர்ந்த கண்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பிறப்பிலிருந்து பல்வேறு சவால்களை கடந்து தற்போது திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடி வருகிறார்.
இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப் என்ற மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மேலும் விஜயலட்சுமி பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை பற்றி கூறியதாவது எனது திருமண வாழ்க்கை மிகவும் கண்ணீர் நிறைந்ததாகவும், பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் எனது கணவர் என்னிடம் ஒரு சைக்கோ போன்ற நடந்து கொண்டதாகவும், எனது பெற்றோர்களிடமிருந்து என்னை பிரிக்க முயற்சி செய்ததாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார். இதனால் மனவேதனையில் தான் தவித்ததாகவும் இதன் காரணமாகவே 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.