96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பரபரப்பு... நூலிழையில் உயிர் தப்பிய லைட்மேன்... மார்கழி திங்கள் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.!
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம் மார்கழி திங்கள். இந்தத் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குரான சுசீந்திரன் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
புதுமுக கதாநாயகன் மற்றும் கதாநாயகி நடிக்கும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரனை கதை எழுதி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, தேனி, பழனி உள்ளிட்ட நகரங்களிலிருக்கும் கிராமங்களில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரைப்படத்தின் ஷூட்டிங் என்பது ஏற்பட்ட விபத்து ஒன்று பற்றி சமூக வலைதளங்களில் பேசியிருக்கிறார் அதன் தயாரிப்பாளர் சுசீந்திரன்.
பழனி அருகேவுள்ள கணக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள காட்டு கோவில் ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பலத்த புயல் காற்று மற்றும் மலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஷூட்டிங் இருக்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய கோடா லைட்டுகள் சரிந்து விழுந்துள்ளன. மேலும் ஒரு லைட்டை இடியும் தாக்கியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட்டுமென்கள் உயிர் தப்பியதாக படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
Lightning struck #MargazhiThingal sets near Palani today. Team escaped unhurt,but equipment damaged. @Dir_Susi thanks crew members for immense support@offBharathiraja #VennilaProductions @manojkumarb_76 @Shyam66465423 @maalu1815 @gvprakash #KasiDinesh @KabilanVai @vasukibhaskar pic.twitter.com/XfNOAhkj2h
— Nikil Murukan (@onlynikil) May 30, 2023