அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
விஜய்யின் GOAT படத்தில் இணையும் த்ரிஷா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் GOAT படத்தின் ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் பிரபல நடிகை திரிஷா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நடிகை திரிஷா, விஜய் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.