மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலயா? தளபதியா? அனைவரின் முன்பும் வெளிப்படையாக போட்டுடைத்த விக்ரம் மகன்!! வீடியோ இதோ..
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கினார். படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ் நடித்தார்.
படத்தின் வேலைகள் முடிந்து காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் படத்தின் இறுதி காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், மீண்டும் முதலில் இருந்து படத்தை வேறொரு இயக்குனர் வைத்து இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து அப்படம் ஆதித்ய வர்மா பெயரிடப்பட்டு, துருவ்விற்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்க, அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆதித்ய வர்மா திரைப்படம் நவம்பர் 8ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் துருவ் விக்ரம் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துவருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் 'நீங்கள் தல ஃபேனா இல்லை தளபதி ஃபேனா? என மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுள்ளனர். அதற்கு அவர் "Honestடா சொல்லணும்னா நான் தளபதி ஃபேன்" என கூறியுள்ளார். இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
Dhruv Vikram : Honest ah Sollanum na #Thalapathy fan 😎 #BIGIL pic.twitter.com/TfLEVMCnPx
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 16, 2019