#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை... கணவர் தான் காரணமா?..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
நடிகை ஒருவர் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டோலிவுட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் கட்டா மைதிலி. இவர் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று ஹைதராபாத்தில் ப்ரீசல் எனும் 8 ரம்பா பாட்டில்கள் மற்றும் அதிக தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதற்கிடையில் அவர் பஞ்சகுட்டா காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது கணவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதாக செய்திகள் தகவல் வெளிவந்துள்ளன.இதன்பின் தான் மைதிலி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சகுட்டா காவல்நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே, தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அத்துடன் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுயநினைவற்ற நிலையில் மைதிலி மயங்கி கிடந்துள்ளார். இதனால் உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மைதிலி கடந்த வருடம் செப்டம்பர் 27ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் ஒன்றினை அளித்தது தெரியவந்தது.
தொடர்ந்து எதற்காக அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்? என்றும், அவரது கணவருக்கும், அவருக்கும் என்ன பிரச்சனை? என்றும் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.