மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணிய கருத்துக்களால் விமர்சிக்கப்பட்ட அனிமல் படத்தை பாராட்டிய நடிகை திரிஷா: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் அனிமல். இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.
கடந்த 1-ஆம் தேதி வெளியான இப்படத்தை பார்த்த நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிமல் கல்ட் திரைப்படம் என பாராட்டி இருக்கிறார்.
அனிமல் படத்தில் உள்ள கவர்ச்சி காட்சிகளும் கண்டனத்தை சந்தித்தன. இப்படம் பெண் வெறுப்பைப் பேசுவதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், திரிஷாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய நடிகை, அனிமல் படத்தை கல்ட் என பாராட்டியது வேடிக்கையாக இருப்பதாக ட்ரோல் செய்தனர். இதன் காரணமாக தனது பதிவை திரிஷா நீக்கியதாக கூறப்படுகிறது.