#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒருவழியாக சேலஞ்சை ஏற்று, அசத்தலாக செய்து முடித்த நடிகை திரிஷா! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
நாடு முழுவதும் தற்போது மரங்களை நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது. தெலுங்கானா எம்.பி சந்தோஷ்குமார் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச்சை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் க்ரீன் இந்தியா சேலஞ்சை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் சவாலை ஏற்று மரம் நட்டனர்.
I accepted the #GreenIndiaChallenge and planted two saplings today.
— Trish (@trishtrashers) October 3, 2020
I request you all to do your bit and help towards a greener India🌱 pic.twitter.com/poz7r3kRRV
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் க்ரீன் இந்தியா சேலஞ்சை செய்து முடித்ததோடு அதனை செய்ய சூர்யா, மோகன்லால், ரக்ஷித் ஷெட்டி, திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதனை ஏற்று நடிகை திரிஷா தனது வீட்டில் செடி நட்டுள்ளார். மேலும் அத்தகைய புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அனைவரும் மரக்கன்றுகள் நட்டு இந்தியாவை பசுமையாக்குவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.