#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 வருஷத்திற்கு பிறகு மீண்டும் 5வது முறையாக தளபதியுடன் இணையும் பிரபல நடிகை! அட ரெண்டு பேரும் ஹிட் ஜோடியாச்சே!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். வில்லனாக பிரகாஷ் ராஜு மற்றும் ஷியாம், சம்யுக்தா, பிரபு, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிவடைந்தநிலையில் இறுதிக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் என கூறப்பட்ட நிலையில் ஒருவர் சமந்தா என்ற தகவல் வெளியானது. மற்றொரு ஹீரோயின் யார் என ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருந்து வந்தநிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்குமுன்பு இருவரும் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 5வது முறையாக கூட்டணியில் இணையவுள்ளனர்.