மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழர்களை பிரிக்க நினைக்காதீர்கள்.. டிவிட்டரில் டிரெண்டாகும் #TamilsAreNotHindus ஹேஷ்டேக்..!!
தமிழ் சினிமாவில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, வாடிவாசல், விசாரணை, அசுரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இராஜராஜ சோழன் ஒரு தமிழ்பேரரசர்.
அவர் இந்து கிடையாது என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனும், வெற்றிமாறன் கூறியது சரி என்று கூறவே, தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பிரிக்க நினைக்காதீர்கள் என்று குறிப்பிட்டு #TamilsAreNotHindus ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.