மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி.. லெஜெண்ட் பட ஹீரோயினுக்கு சம்பளம் இத்தனை கோடியா?.. நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..!!
தமிழ் திரையுலகில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலில் இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் தமன்னா. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள்சரவணன் நடிப்பில், தயாரிப்பில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரௌடேலாவின் சம்பளம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது. முதலில் லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்த ஹன்சிகா மற்றும் தமன்னாவிடம் தான் பேசியுள்ளனர். ஆனால் அவர்களை நடிக்க வைக்க முடிவெடுத்த நிலையில், அவர்கள் ஒப்புக்கொள்ளாததால், நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், அருள் சரவணனுடன் நடிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஊர்வசி ரௌடலா நயன்தாராவின் சம்பளத்தை இரு மடங்கு சம்பளமாக கேட்டு பெற்றுக்கொண்டதாகவும், வேறு வழியில்லாமல் இதனை அண்ணாச்சியும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், ஊர்வசிக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களை அதிர வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.