திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. இத்தனை கோடிகளா!! மூன்று நாளில் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி குவித்த வசூல் எவ்வளவு பார்த்தீங்களா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி நடிகனாக கலக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சந்தானம். அவர் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.
இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மூன்று நாட்கள் படைத்த வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிப்ரவரி 2-ம் தேதி வெளிவந்த இப்படம் முதல் நாள் முடிவில் ரூ1.5 கோடி, இரண்டாவது நாள் முடிவில் ரூ.1.5 கோடி என மொத்தம் 3 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இன்று மூன்று நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ 5.5 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.