திடீரென விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்! ஓ!! இதுதான் காரணமா??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் பிரஜன்.
அதனைத் தொடர்ந்து பிரஜன் அன்புடன் குஷி என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் பிரஜன் ஹீரோவாகவும் சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரஜன்க்கு அதிக சினிமா வாய்ப்புகள் வருவதால், தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிக்க முடியாததால் திடீரென சீரியலில் இருந்து பிரஜன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த முன்னா தற்போது வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.