பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கியூட் ஜோடி.! காதலியை கரம்பிடித்த வானத்தைப்போல சீரியல் நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
சன் தொலைக்காட்சியில் அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் வானத்தைப்போல. இந்தத் தொடரில் ராஜபாண்டி கேரக்டரில் நடித்து வருபவர் அஸ்வின் கார்த்திக். இவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் அஸ்வின் கார்த்திக் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் என பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் மேக்கப் ஆர்டிஸ்ட் காயத்ரி என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் அஸ்வின் கார்த்திக் மற்றும் அவரது காதலி காயத்ரி இருவருக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரு வீட்டார்கள் முன்னிலையில் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.