மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்க வேலையை மட்டும் பாருங்க! கடுப்பாகி, நறுக்கென நடிகை வனிதா வெளியிட்ட பதிவு! எதனால் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை வனிதா. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் நெட்டிசன்களும், சில பிரபலங்களும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் வனிதா தற்போது பீட்டர்பால் பயங்கரமாக குடிப்பதாக குற்றம்சாட்டி அவரை விட்டு பிரிந்தார். மேலும் சமீபத்தில் கோவாவில் என்ன நடந்தது என்பதைக் குறித்து கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவரைக் கிண்டல் செய்து மோசமாகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை கூறத் துவங்கினர்.
For all the people who love me and care about me...I will always update you and keep you informed on my happiness and sorrows...for those who love to gossip and speculate on my very Interesting life kindly #mindyourownbusiness #myob
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 30, 2020
Some fake unpaid PRO`spread halfcooked news
இந்த நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், என் மீது அன்பும், அக்கறையும் வைத்துள்ள அனைவருக்கும்...என் வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கொடுப்பேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கிசுகிசுப்பவர்கள் தயவு செய்து உங்களின் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் தங்களுக்கு பிடித்தது போன்று வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. அதனால் என் வாழ்க்கையில் தலையை நுழைப்பதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனிக்கவும், நான் தைரியமானவள், பலரது அன்பு பெற்றவள். நான் எப்பொழுதும் நலமாக இருப்பேன். நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.