மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோவிகா வெளியேற்றப்பட்டது சரியான முடிவு கிடையாது - வனிதா விஜயகுமார் ஆவேசம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார்.
தொடக்கத்தில் வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் காணப்பட்ட அவர், விளையாட்டை சரியாக புரிந்து கொண்டு விளையாடினார். குறிப்பாக கல்வி குறித்து பேசிய விவாதங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளானது.
மேலும் விசித்ரா மற்றும் பிரதீப் உடன் சண்டை போட்டதும் பிக் பாஸ் ரசிகர்களின் பார்வை இவர் மீது திரும்பியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் சாப்பிடுவதும் தூங்குவதுமாக ஜோதிகா இருப்பதாக சமூக வலைதளங்களில் மீன்கள் வெளியாகியது.
இந்த நிலையில் பார்வையாளர்களின் ஓட்டுகள் அடிப்படையில் கடந்த வாரம் ஜோதிகா வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய ஜோதிகாவின் தாயார் வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சி நியாயமான நிகழ்ச்சியாக நடக்கவில்லை. ஜோதிகா எலிமினேட் செய்யப்பட்டது சரியான முடிவு கிடையாது.
விஜய் டிவி நிச்சயம் இதை செய்திருக்காது. திறமையான மற்றும் நடுநிலையான போட்டியாளராக விளையாடினார் ஜோவிகா. ஒண்ணுமே செய்யாதவர்கள் மற்றும் ஓவராக செய்பவர்கள் உள்ளே இருக்கும்போது ஜோதிகா வெளியேற்றம் சரியான நடவடிக்கையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.