மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. இவங்களையும் விட்டுவைக்கலையா?? நடிகை வரலட்சுமி கூறிய பகீர் புகார்.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த 'போடா போடி' படத்தில் கதாநாயாகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினிமாதுறையில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சரத்குமாரின் மகளாவார். அவர் தொடர்ந்து தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்து அவர் பெருமளவில் பிரபலமானார்.
நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் ஹீரோயினாக மட்டுமின்றி வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில், திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சினிமாதுறையில் பல பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் எனக்கும் நடைபெற்றுள்ளது.
பிரபல நடிகர், முன்னணி டைரக்டர் இருவரும் என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணமுடியுமா எனக் கேட்டனர். அப்படி செய்தால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றால் அப்படி எந்த பட வாய்ப்பும் எனக்கு தேவையில்லை என நான் மறுத்து விடுவேன். குற்ற உணர்வு எதுவுமில்லாமல் இரவில் நிம்மதியாக தூங்கவேண்டும். வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட்லாம் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.