மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. என்னா ஆட்டம்! மலையில் செம ஸ்டைலாக நடிகை வரலட்சுமி போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக மட்டுமின்றி சண்டகோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் அவதாரமெடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். வரலட்சுமி கைவசம் தற்போது இரவின் நிழல், கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் போன்ற படங்கள் உள்ளன. அவர் தற்போது தனது புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் சென்றுள்ளாராம்.
அங்கு அவர் மலையில் செம ஸ்டைலாக குத்தாட்டம் போட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.