"முதல் முறை இந்த மாதிரி காட்சியில் நடித்தேன்" மனம் திறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

2012ம் ஆண்டு "போடா போடி" திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாருக்கும், அவரது முதல் மனைவி சாயாவுக்கும் மகளாகப் பிறந்தார். மேலும் வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா , சர்க்கார், மாரி 2, நீயா 2, கன்னி ராசி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, கன்னித்தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் தேஜா மோர்னி இயக்கத்தில் "கோடபொம்மாலி பிஎஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் வரலட்சுமி. அதில் அவர் பேசியதாவது,"நான் இதுவரை எந்த படத்திலும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததில்லை.
ஆனால் கதைக்கு அவசியம் என்பதால் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அந்த காட்சி எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் நான் தான் ஹீரோவாக உணர்கிறேன். இதில் நான் போலீசாக நடித்துள்ளேன். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.