மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெந்து தணிந்தது காடு ரிலீஸ்.. FDFS வந்த கூல் சுரேஷின் கார் கண்ணாடியை நொறுக்கிய சிம்பு ரசிகர்கள்..! நடந்தது என்ன?..!
தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கௌதம் வாசுதேவன் மூவரும் கூட்டணியில் மூன்றாம் முறையாக இப்படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தை காண்பதற்காக FDFS சென்ற நடிகரும், சிம்புவின் வெறியருமான கூல் சுரேஷ் திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது அவரை தியேட்டருக்குள் செல்லவிடாமல் வழிமறித்த சிம்புவின் ரசிகர்கள் தலைவா.. தலைவா என கத்தி அவரது கார் மீது ஏறி புகைப்படம் எடுத்து கை குலுக்கினார்.
அத்துடன் ஒரு ரசிகர் கார் மீது விழுந்து கூல் சுரேஷ் கையை பிடித்துவிட்டு பின் எழுந்து சென்றபோது, அவரது காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இருந்தபோதிலும் படத்தை கான அவர் வெறியோடு சென்றார்.