#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மாடியோ... இத்தனை லட்சத்திற்கு பைக் வாங்கியுள்ளாரா இயக்குனர் வெற்றிமாறன்.! வைரலாகும் பைக்கின் புகைப்படம்.!
முதலில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராகி பிரபலமானவர் வெற்றிமாறன். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனையடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். அப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றார். அதனையடுத்து சிறிது கால இடைவெளிக்கு பிறகு விசாரணை கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து விசாரணை படத்தை இயக்கினார். இப்படமும் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து வட சென்னை, அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கி பிரபலமான முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக மாறியுள்ளார். தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் ₹19 லட்சத்திற்கு பி.எம்.டபிள்யூ. பைக் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் பைக் வாங்கும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.