பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கர்ப்பமாக இருப்பதை இப்படியா காட்டுவது! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய சினிமாக்களில் கலக்கிய சமீரா ரெட்டி இரணடாவது முறையாக கர்ப்பமானதை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
முதலில் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர் தமிழில் முதல்முறையாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் சமீரா.
அதனைத் தொடர்ந்து தமிழில் அசல், வெடி, வேட்டை என முன்னனி நடிகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு மகன் பிறந்தார்.
இந்நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் சமீரா ரெட்டி. ஏற்கனவே இதுகுறித்து பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமீரா ரெட்டி தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மிகவும் சல்லடையான உடையனிந்து தான் கர்ப்பமாக இருப்பதை காட்டும் சமீரா ரெட்டியின் வீடியோ பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.