மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது" என அறிவித்தவுடன் விஜய் ஆண்டனி கூறிய சர்ச்சையான கருத்து..
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடித்து வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், இவர் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2' திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறி வாழ்த்து பெற்றார் விஜய் ஆண்டனி. இதன் பின் ரசிகர்களுடன கேக் வெட்டி இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடி இருக்கறார.
இதன் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இவர் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு தான் இது கஷ்டமான விஷயம். மக்களுக்கு மகிழ்ச்சி தான் தரும் என்று கூறிய இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.