திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இசை நிகழ்ச்சி நடத்த போகும் விஜய் ஆண்டனி.! வெளியான அறிவிப்பு..
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தாலும் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பிற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற நிலையில் விஜய் ஆண்டனி தற்போது இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் உயிரிழந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்விற்கு பிறகு விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடத்தப் போவது மேலும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி பெங்களூரு, சென்னை, கோவை போன்ற இடங்களில் நடக்கவிருக்கிறது என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விஜய் ஆண்டனியின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி இருக்கிறது என்றும், கூறப்பட்டு வருகிறது.