பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"சமந்தாவிற்கு இப்படியாக நீங்க தான் காரணம்" பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வியால் கடுப்பான விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள திரைப்படம் "குஷி", செப்டம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதன்படி , கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், விஜய் தேவரகொண்டாவிடம், "சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் நோய் இப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே இருந்ததா?" என்று கேட்டார்.
அதற்கு விஜய் தேவரகொண்டா, "சமந்தாவுக்கு இந்நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு முன்பே, படப்பிடிப்பு 60% வரை முடிந்துவிட்டது. அதன் பிறகுதான், அவருக்கு மயோசிட்டிஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்து மீதி 40% படத்தை எடுத்து முடித்தோம்" என்கிறார்.
இதன்பின் பயில்வான் விஜய் தேவரகோண்டாவிடம்," அப்படினா சமந்தாவுக்கு இந்த நோய் வர நீங்க தான் காரணம் .?" என்று கூறினார். இதைக்கேட்ட அனைவரும் சிரித்தனர். அதற்கு விஜய் தேவரகொண்டா " எனக்கு புரியவில்லை" என்று கூறிக் கிளம்பிவிட்டார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.