மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுடில் ஹீரோயினாக அறிமுகமாகும் விஜய் பட நாயகி... அசத்தலான அப்டேட்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நித்யா மேனன். காஞ்சனா 2 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாள சினிமாவில் பெரும்பான்மையாக நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் நித்யா மேனன் .
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தாலும் அதில் சிறிய அளவிலான கதாபாத்திரத்தில் தான் நித்யா மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஹிந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்
பாலிவுட் இயக்குனர் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் மர்டர் மிஸ்டரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் நித்யாமேனன். இந்தத் திரைப்படத்தில் இவருடன் விவேக் ஓபராய் மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஸ்காட்லாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது.