பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை குஷ்புவை தொடர்ந்து பாஜகவில் இணைகிறாரா தளபதியின் தந்தை.? அவரே அளித்த அதிரடி விளக்கம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் விரைவில் பாஜக கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தநிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலங்களாகவே நடிகர் விஷால், கருணாஸ், நடிகை சுகன்யா, குஷ்பூ போன்ற திரைப்பிரபலங்கள் சிலர் பாஜக கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அதற்கு சிலர் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பூ அதிலிருந்து விலகி நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் தந்தையும் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
ஆனால் அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நான் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல்.இது மாதிரியான தகவல்களை யார்தான் பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.