திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயின் கண்முன்னே நடந்த தந்தையின் இரண்டாம் திருமணம்... வைரலாகும் புகைப்படம்!!
1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சினிமாவிலிருந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு ஷோபா என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1974 ஆம் ஆண்டு விஜய் பிறந்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் கிறித்தவ சமயத்தை சேர்ந்தவர். இந்து முறைப்படி ஏற்கனவே திருமணம் நடைப்பெற்று விட்டதால் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள ஷோபா ஆசைப்பட்ட காரணத்தால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும் போது சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர் கிறிஸ்தவ முறைப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.