மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படப்பிடிப்பின் போது நடிகையுடன் கிரிக்கெட் விளையாடிய இளைய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார் விஜய்.
தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'G.O.A.T என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாகவும், சரத்குமார், ஷியாம், யோகி பாபு போன்றவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இது போன்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய், ராஸ்மிகா மந்தானா மற்றும் படக்குழுவினர் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அந்த வீடியோவை தற்போது பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.