குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"த்ரிஷாவுக்கு லிப்லாக் கொடுக்க மறுத்த நடிகர்!" யாரென்று தெரியுமா?!
1999ம் ஆண்டு "மிஸ். சென்னை" போட்டியில் வெற்றி பெற்றவர் திரிஷா. அதே ஆண்டு "ஜோடி" படத்தில் ஒரு துணைக் கதாப்பாத்திரத்தில் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார். இதையடுத்து 2002ம் ஆண்டு "மௌனம் பேசியதே" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயுடன் இவர் நடித்த "லியோ" திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. முன்னதாக மணிரத்னம் இயக்கிய "பொன்னியின் செல்வன்" படத்தில் குந்தவையாக இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் "96". இப்படத்தை சி. பிரேம்குமார் இயக்கியிருந்தார். படம் வெளியானபோது அனைவரையும் கலங்கடித்த படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு லிப்ளாக் காட்சியை இயக்குனர் வைத்திருந்தாராம்.
ஆனால் படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி "அப்படி ஒரு லிப்லாக் காட்சி வேண்டாம். அது எல்லோருக்கும் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்" என்று கூறி முத்தக் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.