பிகில் பாண்டியம்மாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!
வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் முதன் முதலில் பீட்சா திரைப்படத்தில கதாநாயகனாக நடித்தார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக கலக்கி வந்த விஜய் சேதுபதி, சமீபத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இறுதியாக விஜய் சேதுபதி ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப் பெரும் வெற்றியை அடைந்தது.
இது போன்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக திரை துறையினர் பேசி வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி இதற்கு மறுத்து விட்டதாகவும் இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.