மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் என்னதான் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தாலும், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி திரைப்படங்களில் இனி வரும் காலங்களில் வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என அதிர்ச்சி வரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது அனைவரும் வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நடிப்பதற்கு மட்டுமே என்னை அழைக்கிறார்கள். நான் நடிப்பதால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. நானும் அதை நல்லது தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் இந்த முடிவை கைவிட முடிவு செய்துள்ளேன். வில்லனாக நடிக்க நான் தவிர்த்த படங்களே 20 படங்களுக்கு மேல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.