குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஒரு ரூபாய் கூட வாங்காமல் சிவகார்த்திகேயனுக்காக விட்டுக்கொடுத்த விஜய் சேதுபதி.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு முன்னதாகவே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், முதன் முதலில் 'பீட்சா' திரைப்படத்தின் மூலமே இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதன்படி சிவகார்த்திகேயனும், விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரையில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இது போன்ற நிலையில், பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த 'மாவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார். இதற்காக ஒரு ரூபாய் கூட வாங்க வில்லையாம் விஜய் சேதுபதி. மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் மீது இருக்கும் நட்பின் காரணமாக இவர் இதைச் செய்தார் என்று பேசப்பட்டு வருகிறது. இச்செய்தி இணையத்தில் தீயாய். பரவி வருகிறது.