மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் முன்னணி நடிகரின் படங்கள்; உற்சாகத்தில் ரசிகர்கள்!!
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதே நாளில் விஜய் சேதுபதி மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். அந்த அறிவிப்பு என்னவெனில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தை பற்றியது தான்.
இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#96TheMovie releasing Oct 4th#96MovieFromOct4th
— VijaySethupathi (@VijaySethuOffl) September 22, 2018
@trishtrashers @Premkumar1710 @MadrasEnterpriz @7screenstudio @govind_vasantha @proyuvraaj pic.twitter.com/6x9gdncT2m
செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் செக்க சிவந்த வானத்தை தொடர்ந்து அடுத்த வாரமே இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.