குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விஜய் சேதுபதியுடன் ஜோடி போட போகும் கங்கனா ரனாவத்.. எந்த படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தற்போது நடித்து வருகிறார் தமிழில் முதன் முதலில் 'பீட்சா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படத்திற்க்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார் விஜய் சேதுபதி. கதாநாயகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜவான். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதற்கு முன்னதாக தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றிருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், தற்போது சர்ச்சைகளுக்கு பெயர் போன நாயகியான கங்கனா ரனாவத்துடன் திரில்லர் கதைகளத்தை கொண்ட திரைபடத்தில் இந்தி மொழியில் நடிக்கவிருக்கிறார்விஜய் சேதுபதி. இச்செய்தி இணையத்தில் வெளியாகி இவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.