குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
என்னது.! விஜய் சேதுபதியின் மகன் ஹீரோவாக போகிறாரா.? எந்த படத்தில் தெரியுமா.!
2010ம் ஆண்டு "தென்மேற்குப் பருவக்காற்று" திரைப்படத்தில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள இவர், "பெண்" என்ற தொலைக்காட்சித் தொடரில் தான் முதலில் நடித்தார். தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் "நாளைய இயக்குனர்" நிகழ்ச்சிக்காக சில குறும்படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின்னர் புதுப்பேட்டை படத்தில் தனுஷின் நண்பனாக சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து வெண்ணிலா கபடிக்குழு, லீ, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன் சூர்யா, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனவும், இப்படத்தின் பூஜை நவம்பர் 24ம் தேதி நடைபெறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.