"சக மனிதர்களை மதிக்க வேண்டும்" விஜய் சேதுபதியின் பரபரப்பான பேச்சு..



Vijay sethupathy viral video

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று (நவம்பர் 20) தொடங்கியது. இது 54வது திரைப்பட விழாவாகும். இதன் முதல் சர்வதேச திரைப்பட விழா 1952ம் ஆண்டு மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னை, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

Sethupathi

2004ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெற்று வரும் இவ்விழா, இந்த ஆண்டும் கோவா தலைநகர் பனாஜியில் ஷியாம் பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த "காந்தி டாக்ஸ்" என்ற மவுனமொழி படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் "இந்த விழாவில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?" என்று கேட்டதற்கு, "சினிமா ஒரு அற்புதமான மொழி. அது பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய அனுபவத்தை பெறுகின்றனர்.

Sethupathi

சினிமா ஒரு அற்புதமான ஊடகமாக உள்ளது. இது சக மனிதர்களை மதிப்பதற்கு சொல்லிக்கொடுக்கிறது. நான் இதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் இதில் ஒரு பகுதியாக இருப்பதற்கு மகிழ்கிறேன்" என்று விஜய் சேதுபதி கூறினார்.